Home சமயம் நாடளாவிய நிலையில் பங்குனி உத்திரம் களை கட்டியது

நாடளாவிய நிலையில் பங்குனி உத்திரம் களை கட்டியது

765
0
SHARE
Ad

Lord-Muruga-Sliderகோலாலம்பூர், மார்ச் 27- நாடளாவிய நிலையில் பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்டது.

நேற்றும், இன்றும் கொண்டாடப்பட்டு வரும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகத்துடன் கூடிய பூசைகள் நடைபெற்றன.

பக்தர்கள் முருகன் ஆலயங்களில் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும்  பல பக்தர்கள் பத்துமலை அடிவாரத்தில் இருந்து புனித பெருநடைப் பயணம் மேற்கொண்டு மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு சென்று சேர்ந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பங்குனி உத்திர கொண்டாட்டத்திற்கு பிரசித்தி பெற்ற மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவில் லட்சணக்கனகான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பங்குனி உத்திர திருவிழா நேற்று செந்தூல் தண்டாயுதபாணி ஆலயத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலை சிறப்பு அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு பூசைகளும், இரவு ரத ஊர்வலமும் நடந்தேறியது.

செந்தூல்  தண்டாயுதபாணி ஆலய பங்குனி உத்திர திருவிழாவில்  கூட்டரசு பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் சிறப்பு பூசையில் கலந்து கொண்டார். திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.