மாரான், மார்ச்28 – தேசிய முன்னணி அரசாங்கம் தற்போது தமிழ்ப்பள்ளிகளுக்கும், ஆலயங்களுக்கும் நிறைய அளவில் மானியம் வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்திற்கு 8 லட்சம் வெள்ளி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தை ம.இ.கா.தேசிய தலைவரும், பிரதமர் துறை அமைச்சருமான டத்தோஶ்ரீ பழனிவேல் ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ம.இ.கா.தலைமை செயலாளர் எம்.முருகேசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் மேம்பாட்டு வசதிக்காக இம்மானியம் வழங்கப்பட்டதாகவும், இது வரை இந்த ஆலயத்திற்கு 27லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மானியமாக வழங்கப்பட்டிருப்பதாக ஜி.பழனிவேல் தெரிவித்தார்.
26,27 ஆகிய நாட்களில் நடைபெற்ற மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவில் ஜோகூர் முதல் பெர்லிஸ் வரையிலான லட்சகணக்கான பக்தர்கள் இந்த ஆலய விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இதை தவிர்த்து சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த பக்தர்களும் மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டனர்.