Home 13வது பொதுத் தேர்தல் தற்போதைய தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறேன் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தகவல்

தற்போதைய தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறேன் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தகவல்

535
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderகோலாலம்பூர், மார்ச் 28- வரும் பொதுத்தேர்தலில் ஶ்ரீ அண்டாலாஸ் தொகுதியிலேயே போட்டியிட விரும்புவதாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

அண்மையில் ஶ்ரீ அண்டாலாஸ் தொகுதியில் தேர்தல் நடவடிக்கை அறை திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் இத்தொகுதியிலேயே போட்டியிட விரும்புகிறீர்களா என்று கேட்ட போது எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றும், தான் இந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது 34,600 வாக்காளர் இருந்ததாகவும், தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 56,800ஆக உயர்ந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

#TamilSchoolmychoice

56,800 வாக்காளர்களில் 61 சதவீதத்தினர் மலாய்க்காரர்கள் அல்லாதவர் என்றும், 39 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் என்றும் கூறிய சேவியர் ஜெயக்குமார் அதிகமான இந்திய வாக்காளர்களை கொண்ட தொகுதியாக ஶ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற தொகுதி இருப்பதாக அவர் கூறினார்.