Home 13வது பொதுத் தேர்தல் மக்கள் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இல்லை – தேர்தலில் வெற்றி பெற்றால் அன்வார்...

மக்கள் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இல்லை – தேர்தலில் வெற்றி பெற்றால் அன்வார் தான் பிரதமர்

631
0
SHARE
Ad

Khalid-Samad Sliderஷாஆலம், மார்ச் 28- சில தரப்பினர் கூறி வருவது போல் மக்கள் கூட்டணி உறுப்பு கட்சிகளுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், வரும் பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் அன்வார்தான் பிரதமர் என்றும் பாஸ் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எங்களை பொறுத்த வரை பிரதமர் பதவியை ஏற்று நடத்த அன்வார் தான் சிறந்தவர் என்றும் அவருக்கு முழு ஆதரவு வழங்குவோம் என்றும் ஷா ஆலம் நாடாளுமன்ற பாஸ் உறுப்பினர் காலிட் சமாட் கூறினார்.

தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றால் அன்வாரின் தலைமைத்துவத்தில் சிறந்ததொரு ஆட்சி அமைக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் மேலும் மக்கள் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் இணக்கத்தின் பெயரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.