Home 13வது பொதுத் தேர்தல் அதிக மாநிலங்களை கைப்பற்றி புத்ரா ஜெயாவில் ஆட்சி அமைக்க முடியும் – லிம் கிட் சியாங்

அதிக மாநிலங்களை கைப்பற்றி புத்ரா ஜெயாவில் ஆட்சி அமைக்க முடியும் – லிம் கிட் சியாங்

616
0
SHARE
Ad

lim_kit_siangகோலாலம்பூர், மார்ச் 28- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் 7 மாநிலங்களை மக்கள் கூட்டணி அரசாங்கம் கைப்பற்றும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“கடந்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர், பினாங்கு, கெடா, கிளந்தான், சிலாங்கூர், பேராக் ஆகிய மாநிலங்களில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் ஒரு சில அரசியல் பிரச்சினைகளால் பேரா மாநிலத்தை இழந்து விட்டோம்” என்று கூறியுள்ள கிட் சியாங், “வரும் பொதுத்தேர்தலில் பேராக்  மாநிலத்தை மக்கள் கூட்டணி நிச்சயம் மீண்டும் கைப்பற்றும் என்பதோடு இதர 4 மாநிலங்களையும் மக்கள் கூட்டணி தக்க வைத்து கொள்ளும்” என்றும் கூறியுள்ளார்.

அதே வேளையில் புதிதாக  பெர்லிஸ், நெகிரி செம்பிலான் மாநிலங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவ்வாறு பெர்லிஸ் – நெகிரி செம்பிலான் மாநிலங்களை கூடுதலாக கைப்பற்றுவதன் வழி மக்கள் கூட்டணி புத்ரா ஜெயாவில் ஆட்சி அமைக்க முடியும் என்றும் அவர் கருத்துரைத்தார்.