Home இந்தியா இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது: டி.கே.எஸ்.இளங்கோவன்

இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது: டி.கே.எஸ்.இளங்கோவன்

612
0
SHARE
Ad

jayalalitha7மார்ச் 28 – இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.

டெல்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-

“அரசியல் விளையாட்டுக்காகத்தான் அவர் எல்லாவற்றையும் செய்கிறார். இந்த அரசால், தன் சொந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கே சரியான பாதுகாப்பைக் கொடுக்க முடியவில்லை. அவரால் எப்படி தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற முடியும்?”

#TamilSchoolmychoice

“அவருக்கு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் மீது ஒன்றும் அக்கறையில்லை; தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அரசியலாக்குவதில்தான் அவருக்கு ஆர்வம் இருக்கிறது”

-இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.