Home கலை உலகம் ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளம் ரூ.20 கோடியா…?!!

ஏ.ஆர்.முருகதாஸ் சம்பளம் ரூ.20 கோடியா…?!!

687
0
SHARE
Ad

imagesசென்னை, மார்ச் 27- அஜீத் நடித்த தீனா படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து விஜயகாந்த் நடித்த ரமணா படம் அவரை முன்னணி இயக்குனராக்கியது. அதே படத்தில் தெலுங்கு உள்பட பல மொழிகளில் இயக்கியவர், அதன்பிறகு கஜினி படத்தை இந்தி வரை இயக்கினார். அதையடுத்து பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனரானார் முருகதாஸ். ஆனால் அவர் இயக்கிய ஏழாம் அறிவு படம் மட்டுமே சறுக்கி விட்டது. இருப்பினும் துப்பாக்கி படம் கைகொடுத்து மீண்டும் முருகதாஸை உயரத்தில் ஏற்றி விட்டது. அதனால் இப்போது அதே படத்தை இந்தியில் அக்சய்குமாரை வைத்து ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், மீண்டும் தமிழில் விஜய்-முருகதாஸை இணைத்து ஒரு படம் இயக்கும் முயற்சி நடக்கிறது. துப்பாக்கி படம் 185 கோடி வசூல் சாதனை புரிந்ததால், அடுத்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறதாம். மேலும் துப்பாக்கி படத்தை இயக்க 12 கோடி மட்டுமே வாங்கிய, முருகதாஸ் அடுத்து விஜய்யை இயக்கும் படத்துக்கு 20 கோடியாக தனது படக்கூலியை உயர்த்தியிருக்கிறார் என கூறப்படுகிறது. அவரது படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்து வருவதால், அவர் கேட்ட சம்பளத்தை தருவதற்கு உடனே சம்மதித்துள்ளாராம் அப்படத்தை தயாரிக்கப்போகும் லண்டன் கருணா என்பவர்.