Home கலை உலகம் மலேசிய படம் இயக்குகிறார் பாக்யராஜ்

மலேசிய படம் இயக்குகிறார் பாக்யராஜ்

693
0
SHARE
Ad

indexகோலாலம்பூர், மார்ச் 27- மலேசியால் சுமார் 20 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கென்று தனியாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் செயல்படுகிறது. தற்போது தனியாக மலேசிய தமிழ் கலைஞர்கள் பங்கேற்கும் திரைப்படங்கள் அங்கு உருவாகிறது. இங்குள்ள பிரபல இயக்குனர்கள் இயக்கிக் கொடுக்கிறார்கள். அதற்கு இங்கு கொடுப்பதை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ராம நாராயணன் ஏற்கெனவே ஒரு படம் இயக்கி விட்டார். தற்போது மற்றொரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

திருமலை, சஞ்சய்ராம், ரவிமரியா ஆகியோர் மலேசிய படங்களை இயக்க இருக்கிறார்கள். தற்போது இந்த பட்டியலில் கே.பாக்யராஜும் இணைந்திருக்கிறார் விரைவில் மலேசிய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதனை மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் தயாரிக்கிறார். தற்போது பாக்யராஜ் தமிழில் இயக்கிக் கொண்டிருக்கும் 3 ஜீனியஸ் படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா சென்றுள்ளார். அப்போது அவர் மனைவி பூர்ணிமாவுடன் அமைச்சரை சந்தித்து பேசினார். அதில் இரு நாட்டு திரைப்பட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு குறித்து விவாதித்தார்கள். அதில் அடுத்து தான் இயக்கும் மலேசிய படம் குறித்தும் அமைச்சருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.