Home இந்தியா ‘ இலங்கை நட்பு நாடு என்ற வார்த்தையே வேண்டாம்’- தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

‘ இலங்கை நட்பு நாடு என்ற வார்த்தையே வேண்டாம்’- தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

604
0
SHARE
Ad

Jayalalitha-Slider--1சென்னை, மார்ச் 27-இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இலங்கையை , இந்தியா நட்பு நாடு என்று கூறி வருவதையும் நிறுத்த வேண்டும் என்றும் இன்றைய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இன்று மாணவர்கள் போராட்டம் தொடர்பாக தி.மு.க,. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இது குறித்த விவாதத்தில் காரசார மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து தி.மு.க., சட்டமன்றத்திலிருந்து வெளியேறியது.

#TamilSchoolmychoice

தொடர்ந்து இலங்கை தொடர்பான ஒரு தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஜெ,. வால் முன்மொழியப்பட்டது.

இரட்டை வேடம் போடும் கருணாநிதி :

இந்த தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்னதாக முதல்வர் ஜெ., பேசுகையில்;

“இலங்கை தமிழர்கள் அழிய மறைமுக காரணமாக இருந்தது தி.மு.க., தான். ஆனால் மகள் கனிமொழி தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி பரிசு பொருட்கள் பெற்று வந்தனர் . இவர்களுக்கு விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பும் அளித்தார். இலங்கை விவகாரத்தில் தி.மு.க., இரட்டை வேடம் போட்டு வருகிறது. தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி” – என்று கூறினார்.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்:

“எனது தலைமையிலான அரசு இலங்கை வாழ் மக்களுக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கடந்த முறை கொண்டு வந்த தீர்மானத்தை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாக இன்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. யாருக்கும் தாழாமல், தாழ்த்தப்படாமல், சுரண்டப்படாமல் , அடிமையாக இல்லாமல் வாழ வேண்டும் என்பதே அண்ணாத்துரையின் பொன்மொழிகள் ஆகும்.”

“இதன்படி இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி தர  மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழருக்கு தொடர்ந்து இன்னல் தரும் இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்தியா நிறுத்தி கொள்ள வேண்டும். போர்க்குற்றம் புரிந்த குற்றவாளிகள் சர்வதேச கோர்ட் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும். தமிழர் மீதான தடையை நீக்கும் வரை இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். தனி ஈழம் குறித்து இலங்கையில் மற்ற பகுதியில் வாழும் தமிழர்களைக் கொண்டு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் , போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் முன்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும்”

இவ்வாறு தீர்மானம் தமிழ் நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.