Home 13வது பொதுத் தேர்தல் கெடா சட்டமன்றம் கலைக்கப்படும் தேதியை கட்சியின் தலைமையகம் முடிவு செய்யும் – அசிசான்

கெடா சட்டமன்றம் கலைக்கப்படும் தேதியை கட்சியின் தலைமையகம் முடிவு செய்யும் – அசிசான்

563
0
SHARE
Ad

imageஅலோர் ஸ்டார்,மார்ச் 27 – கெடா மாநில சட்டமன்றம் கலைக்கும் தேதியை பாஸ் கட்சியின் தலைமையகம் முடிவு செய்யும் வரை தான் காத்திருக்கப்போவதாக கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

கெடா மாநில சட்டமன்றம் வரும் மே மாதம் 5 ஆம் தேதியோடு அதன் தவணை காலம் முடிந்து தானாகவே கலைந்து விடும் நிலையில், அதற்கு முன்பாகவே கலைப்படுமா அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படும் தேதி வரை காத்திருக்குமா என்பதை கட்சியின் தலைமையகம் தான் முடிவு செய்யவேண்டும் என்றும் அசிசான் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜ.செ.க தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருப்பதைப் போல் மக்கள் கூட்டணியின் சட்டமன்றங்கள் அனைத்தும் நாடாளுமன்றம் கலைக்கப்படும் அதே தேதியிலும் கலைக்கப்படலாம் என்று அசிசான் அறிவித்துள்ளார்.