Home நாடு கெடா : 36 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காடு வாக்களிப்பு

கெடா : 36 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காடு வாக்களிப்பு

249
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு 6 மாநிலங்களிலும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்று பிற்பகல் 4.00 மணிவரை 68 விழுக்காட்டினர் கெடா மாநிலத்தில் வாக்களித்துள்ளனர்.

நடப்பு மந்திரி பெசார் முகமட் சனுசி தலைமையில் பாஸ்-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மீண்டும் கெடாவைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எங்கும் எழுந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

36 சட்டமன்றத் தொகுதிகளை கெடா கொண்டிருக்கிறது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரதமர் அன்வார் இப்ராகிம் கெடா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் நேர நெருக்கடிகளுக்கு இடையில் பினாங்கு மாநிலம் சென்று அங்கு மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை அன்வார் சந்தித்தார். மற்ற அமைச்சர்களும் அன்வாருடன் சீன அமைச்சரைச் சந்தித்தனர்.

இன்று காலை பினாங்கு மாநிலத்தில் அன்வார் தன் மனைவியுடன் வாக்களித்தார்.