Home One Line P2 “தளபதி 65” – முருகதாஸ் இயக்கும் விஜய்யின் அடுத்த படம்

“தளபதி 65” – முருகதாஸ் இயக்கும் விஜய்யின் அடுத்த படம்

784
0
SHARE
Ad

சென்னை – ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருக்க வேண்டிய, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக இன்னும் வெளிவர முடியாமல் இருக்கிறது.

இந்நிலையிலும் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதைக்கு “தளபதி 65” என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் படம் உருவாகிறது. இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

முருகதாசும் விஜய்யும் இணையும் நான்காவது படமாக “தளபதி 65” திகழ்கிறது. ஏற்கனவே, துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று படங்கள் இந்த இருவரின் கூட்டணியில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, வசூலிலும் சக்கைப் போடு போட்டன.

புதிய படத்தின் ஒளிப்பதிவை சந்தோஷ் சிவன் கவனிக்கிறார். இசையமைப்பை தமன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

படத்தில் இடம் பெறவிருக்கும் நடிக, நடிகையரின் பட்டியல் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் மடோனா செபஸ்டியன் இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல்கள் பரவத் தொடங்கியிருக்கின்றன. அவருக்கு முக்கியக் கதாபாத்திரம் எனக் கூறப்பட்டாலும், கதாநாயகியா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக தடை செய்யப்பட்டிருக்கும் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியவுடன் “தளபதி 65” படத்தின் படப்பிடிப்பும் தொடங்கும். ஆனால் அதற்கு முன்பாக படத் தயாரிப்புக்கான முன்னோட்டப் பணிகள் தொடங்கிவிட்டன.

“மாஸ்டர்” படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை.