Home One Line P2 பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ‘தர்பார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ‘தர்பார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது!

963
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் இருக்கும் திரைப்படம்  தர்பார்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திரையீடு காண உள்ள நிலையில், அண்மையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பெரிய அளவில் நடைபெற்றது. அதனை அடுத்து, அப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் யூடியூப்பில் வெளியிடப்பட்டன. 

இதனிடையே, இரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்த இன்று திங்கட்கிழமை தர்பார் படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, தர்பார் படத்தின் குறுமுன்னோட்டம் வெளியிடப்பட்டு, மில்லியன் கணக்கான மக்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள். அடுத்துசும்மா கிழிஎன்ற பாடல் வெளியிடப்பட்டு அதுவும் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனை அடுத்து வெளிவந்த அனைத்து பாடல்களும் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் டிசம்பர் 7-ஆம் தேதி நடந்தேறியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தர்பார் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: