Home Uncategorized “மறைப்பதற்கு எதுவும் இல்லை, அம்னோ என்னை விசாரிக்கலாம்!”- ஹிஷாமுடின்

“மறைப்பதற்கு எதுவும் இல்லை, அம்னோ என்னை விசாரிக்கலாம்!”- ஹிஷாமுடின்

883
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தம்மை அம்னோ ஒழுக்காற்று வாரியம் விசாரிக்க இருக்கும் செய்தி பரவியப் பிறகு, மறைக்க எதுவும் இல்லை என்று டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் அம்னோ ஒழுக்காற்று வாரியத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி எழுதிய கடிதம் வெளியானதைத் தொடர்ந்து, அவர் மீது எந்தவொரு விசாரணையும் நடத்த அனுமதிப்பதாக அவர் தெரிவித்தார்.

இன்று, பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கட்சியை வலுப்படுத்துவதாக சபதம் செய்கிறார்கள். உண்மையில், அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் கட்சித் தலைவரே  ஒப்புக் கொண்டார்.”

#TamilSchoolmychoice

எனவே, ஊகங்களை எழுப்புவதன் மூலம் நிலைமையை மோசமாக்க வேண்டாம்என்று அவர் நேற்று திங்களன்று தனது முகநூல் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட பதிவுக் குறித்து கூறினார்.

முன்னதாக, அம்னோ ஒழுக்காற்று வாரியம் அதன் முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடினுக்கும், பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கும் உடனான சந்திப்பு தொடர்பாக விளக்கக் கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டதாக உறுதிப்படுத்தியது.

புத்ராஜெயாவில் முகமட் அஸ்மினின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த கூட்டத்திற்கு ஹிஷாமுடின் தலைமை தாங்கியதாக அம்னோ உச்சமட்டக் குழு உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் அடாம் முன்பு கூறியிருந்தார்.

“இப்போது ஒன்றுபட்டு, கோட்டை வரைந்து, மக்களின் நலனுக்காக முன்னேற வேண்டிய நேரம் இது. அம்னோ மற்றும் தேசிய முன்னணி மீதான நம்பிக்கையை மீண்டும் பெற அவர்களுக்கு இது தேவைஎன்று அவர் மேலும் கூறினார்.