Home 13வது பொதுத் தேர்தல் தேர்தலை நடத்த அஞ்சுகிறார் நஜிப் – லிம் கிட் சியாங்

தேர்தலை நடத்த அஞ்சுகிறார் நஜிப் – லிம் கிட் சியாங்

521
0
SHARE
Ad

Lim-Kit-Siang-Sliderகோலாலம்பூர், மார்ச் 27- சில மாநிலங்களின் சட்டமன்றம் காலாவாதியான பின்னும் தேர்தலை நடத்த பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அச்சப்படுவதாக லிம் கிட் சியாங் குற்றம் சாட்டினார்.

ரஹ்மான் RAHMAN தத்துவம் உண்மையாகி விடுமோ என்ற அச்சத்தில் நாடாளுமன்றத்தை கலைக்க அஞ்சுகிறார் என்றார் லிம் கிட் சியாங்.

இந்த ரஹ்மான் சொல்லில் ‘ஆர்’ என்பது ‘ஏ’ என்ற சொல் அப்துல் ரசாக்கையும் ‘எச்’ என்ற சொல் துன் ஹூசேன் ஓனையும் ‘எம்’ என்ற சொல் மகாதீரையும் ‘ஏ’ என்பது அப்துல்லா அடாவியையும் ‘என்’ என்பது நஜிப்பையும் குறிக்கிறது என்ற ஒரு நம்பிக்கை மலேசியர்களிடையே நீண்ட காலமாக பேசப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற கால அவகாசம் முடிவடைந்து விட்டது. ஆனால் ஏப்ரல் 28ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை கலைக்க அவகாசம் இருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் தேர்தலை நடத்த பிரதமர் பயப்படுகிறார் என்பதை அனைவரும் அறிவர் என்று லிம் கிட் சியாங் கூறினார்.