Home இந்தியா நாதுராம் கொள்ளையடித்த 1.5 கிலோ தங்கம் மீட்பு!

நாதுராம் கொள்ளையடித்த 1.5 கிலோ தங்கம் மீட்பு!

899
0
SHARE
Ad

Nadhuramசென்னை – கொளத்தூர் நகைக்கடை கொள்ளை, ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையன் நாதுராம், கடந்த வாரம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

இந்நிலையில், அவனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், தான் கொள்ளையடித்த நகைகளை சவுக்கார்பேட்டையிலுள்ள ஒரு அடகுக்கடை உரிமையாளரிடம் கொடுத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்தான்.

இதனையடுத்து, அடகுக்கடை உரிமையாளரிடம் காவல்துறை விசாரணை நடத்தி 1.5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.