Home நாடு “துணிவிருந்தால் லங்காவியில் போட்டியிடுங்கள்” – கைரிக்கு மகாதீர் சவால்!

“துணிவிருந்தால் லங்காவியில் போட்டியிடுங்கள்” – கைரிக்கு மகாதீர் சவால்!

958
0
SHARE
Ad

Mahathirகோலாலம்பூர் – துணிச்சல் இருந்தால் 14-வது பொதுத்தேர்தலில், தன்னை எதிர்த்து லங்காவியில் போட்டியிடுமாறு பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்குச் சவால் விடுத்திருக்கிறார்.

கிள்ளான் காப்பாரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், “எனக்கு எதிராக அவரை லங்காவியில் போட்டியிடச் சொல்லுங்கள்” என்று சவால் விடுத்தார்.

மகாதீர் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில், லங்காவியில் எந்த ஒரு பங்களிப்பையும் செய்யவில்லை என கைரி குற்றம்சாட்டியதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மகாதீர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.