Home நாடு தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியர்களிடம் உள்ளது: மகாதீர்

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியர்களிடம் உள்ளது: மகாதீர்

1082
0
SHARE
Ad

Mahathirகோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி, இந்திய சமுதாயத்திடம் உள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

நேற்று கிள்ளான் காப்பாரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மகாதீர் உரையாற்றுகையில், “14-வது பொதுத்தேர்தலில் இந்திய சமுதாயத்தினரின் வாக்குகள் மிக முக்கியமாக அமையவிருக்கின்றது. தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியர்களிடம் தான் உள்ளது.”

“பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள். நான் மீண்டும் பிரதமரானால், இந்நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து நல்ல முறையில் கவனித்துக் கொள்வேன். இது தான் என்னுடைய வாக்குறுதி. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால் எங்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்”

#TamilSchoolmychoice

“தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பாகவே மலாய்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என இனவாரியாகப் பிரிவினையை ஏற்படுத்தி பிளவுபடுத்தப் பார்க்கிறது. ஆனால் பக்காத்தான் அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் இப்பிரச்சினைகள் வராது” என்று மகாதீர் தெரிவித்தார்.