Home இந்தியா மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எச்.ராஜா வலியுறுத்து!

மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எச்.ராஜா வலியுறுத்து!

1010
0
SHARE
Ad

H.Rajaமதுரை – கடந்த சனிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சுமார் 50 கடைகள் எரிந்ததோடு, ஆலய வளாகத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அதனைப் பார்வையிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தினார்.

 

#TamilSchoolmychoice