டோக்கியோ – வாழைப்பழத்தின் தோலையும் சுவையாக்கி, அதனையும் சாப்பிடும் வகையில் உருவாக்கியிருக்கிறது ஜப்பானின் டி அண்ட் டி பார்ம் என்ற நிறுவனம்.
மாங்கி வாழைப்பழம் என்றழைக்கப்படும் அதனை உறைநிலைக்கு மாற்றி சூடுபடுத்தும் முறையின் படி, அதன் தோலை மென்மையாக்கி சுவையாக்கியிருக்கிறது அந்நிறுவனம்.
மாங்கி வாழைப்பழம் தற்போது ஜப்பானின் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. அதன் விலை தலா 6 அமெரிக்க டாலர் விற்பனை செய்யப்படுகின்றது.
ஜப்பானில் வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்ற ஒரு பழமாக இருந்து வருகின்றது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இருவர் ஆண்டுக்கு தலா 18 கிலோ வாழைப்பழங்களை வாங்குகிறார்கள்.