கேப்டவுன் – தென்னாப்பிரிக்காவின் தலைநகரமான கேப்டவுன் உலகில் தண்ணீர் இல்லாத முதல் நகரமாக மாறவிருக்கிறது.
கடந்த 100 ஆண்டுகளாக நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக, நீர்நிலைகள் அனைத்தும் வற்றி, தற்போது குடிநீர் கூட இல்லாத நிலையை அடைந்துவிட்டது.
வரும் ஏப்ரல் 12-ம் தேதியோடு, குழாய்களில் வழங்கப்பட்டு வந்த தண்ணீரையும் அந்நாட்டு அரசு நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.
இதனால் அங்கு மிகப் பெரிய கலவரம் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாலும், தண்ணீர் இல்லாத காரணத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாலும் இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
அந்நகரில் வாழும் வசதிபடைத்தவர்கள் எல்லாம் ஆழ்துளை கிணறுகளை அமைக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.
அதேவேளையில், அந்நகரில் வாழும் ஏழை எளிய மக்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.
தற்போது ஒவ்வொரு நாளும், ஒரு நபருக்கு 50 லிட்டர் தண்ணீர் வீதம் அரசாங்கம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.