Home கலை உலகம் தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய ரஜினிகாந்த் மனு!

தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய ரஜினிகாந்த் மனு!

941
0
SHARE
Ad

Rajiniசென்னை – பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரம் தொடர்பாக சினிமா பைனான்சியர் போத்ரா இயக்குநர் கஸ்தூரி ராஜா, ரஜினிகாந்துக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்ய போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவ்வழக்கில் ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்திருக்கும் ரஜினிகாந்த், “எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பது உகந்தது அல்ல. எனவே அவரது வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று பதில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice