Home இந்தியா முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை – டிடிவி தினகரன் கருத்து!

முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை – டிடிவி தினகரன் கருத்து!

1001
0
SHARE
Ad

TTV dhinakaranசென்னை – தனக்கு முதல்வராகும் ஆசை இல்லை என்றும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரை முதல்வராக்குவேன் என்றும் டிடிவி தினகரன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுக்கும் முயற்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அப்போராட்டத்திற்கு ஆதரவாக அவர்களைச் சந்தித்துப் பேசிய பின் டிடிவி தினகரன் இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெல்டா மாவட்டங்களில் வைரமே கிடைத்தாலும் கூட, அங்கு விவசாயம் மட்டுமே நடைபெற வேண்டும். கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டத்திற்கு எங்களது ஆதரவு என்றும் உண்டு” என்று தெரிவித்தார்.
மேலும், “எனக்கு முதலமைச்சர் பதவியின் மீது ஆசை இல்லை. நான் கூறும் 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களோடு இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரை முதல்வராக்குவேன்” என ஆ.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தினகரன் கூறினார்.