Home நாடு “மகாதீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்” – வேதமூர்த்தி

“மகாதீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்” – வேதமூர்த்தி

945
0
SHARE
Ad

Mahathir-Waythamoorthyகோலாலம்பூர் – என்னை மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுத்தால், இந்தியர்களுக்கு முன்பைவிடக் கூடுதலாக செய்வேன் என துன் மகாதீர் கூறியிருப்பதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி குரல் கொடுத்திருக்கிறார்.

“இன்றைக்கு மகாதீரை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் அன்று மகாதீர் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு ஏன் மௌனமாக இருந்தார்கள்?” என வேதமூர்த்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

குறிப்பாக இன்றைய பிரதமர் நஜிப்பே, துன் மகாதீரின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும், பகாங் மாநில மந்திரி பெசாராகவும் பதவி வகித்தார் என சுட்டிக் காட்டிய வேதமூர்த்தி “அப்போது நஜிப்பும் ஏன் மௌனமாக இருந்தார்?” எனவும் வேதமூர்த்தி கேட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மகாதீரின் ஆட்சிக் காலத்தின்போது நஜிப் இந்தியர்களுக்காக ஏதாவது பேசினார்-செய்தார் என்ற செய்திகள் ஆதாரபூர்வமாக இல்லை என்றும் வேதமூர்த்தி மேலும் கூறியிருக்கிறார்.

மகாதீரை நோக்கி அனைவரும் இப்போது குறை கூறுவதற்குக் காரணம், பக்காத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளராக அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவதுதான் என்றும் வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.

“அப்போது அவர்கள் ஏதாவது கூறியிருக்கலாம். அப்போது மௌனமாக இருந்து விட்டு இப்போது மகாதீருக்கு எதிராகக் குரல் கொடுப்பது, மீண்டும் மகாதீர் வந்துவிடுவார் என்ற அச்சத்தினால்தான். இந்திய சமுதாயம் மகாதீருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். காரணம், அவருடனான பல சந்திப்புகளில் அவர் தனது கடந்த கால தவறுகளைத் திருத்தியமைக்க விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 8 இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்து எவ்வித நிவாரணங்களும் இன்றி வெளியேற்றப்பட்ட நிலைமை குறித்தும் அவரிடம் பேசியிருக்கிறேன்” எனக் கூறியிருக்கும் வேதமூர்த்தி,

மகாதீர் தனது 93-வது வயதில் இந்தியர்களுக்கு எதிராகவோ, அநியாயமாகவோ நடந்து கொள்ள மாட்டார் என்று வேதமூர்த்தி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.