Home நாடு தாரணியைக் கொலை செய்தவர் விடுப்பில் இருந்தார் – சக ஊழியர் தகவல்!

தாரணியைக் கொலை செய்தவர் விடுப்பில் இருந்தார் – சக ஊழியர் தகவல்!

1269
0
SHARE
Ad

Murderகோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை 37 வயதான டி.தாரணி, சக ஊழியர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

அந்நபரின் காதலை எற்றுக் கொள்ள தாரணி மறுத்ததால், தான் வாங்கி வைத்திருந்த கத்தியால், தாரணியைக் குத்திக் கொலை செய்ததாக நம்பப்படுகின்றது.

இதனிடையே, தாரணியின் இறுதிச்சடங்குகள் நேற்று புதன்கிழமை செந்துலில் நடைபெற்றன. அதில் கலந்து கொண்ட சக ஊழியர் ஒருவர், தாரணியைக் கொலை செய்ததாகச் சரணடைந்திருக்கும் நபர், இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“மதியம் 12.45 மணியளவில் எனக்கு போனில் அழைத்து சொன்னார். எனினும், அவர் பணியிடத்திற்கு வந்து தாரணியுடன் காரில் சென்றார்”

“தாரணியைக் கொலை செய்துவிட்டு அவர் சரணடைந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தாரணி கொலை செய்யப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக அவரிடம் பேசினேன்” என்று பெயர் கூற விரும்பாத சக ஊழியர் தெரிவித்தார்.