Home கலை உலகம் அஸ்ட்ரோவில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நேரடி ஒளிபரப்பு!

அஸ்ட்ரோவில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நேரடி ஒளிபரப்பு!

1532
0
SHARE
Ad

Astro Sivarathiri Liveகோலாலம்பூர் – முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் தெய்வீக விழாக்களில் மஹாசிவராத்திரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு நடைபெறவுள்ள மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் சிறப்பு நேரலை அஸ்ட்ரோ வானவில் மற்றும் அஸ்ட்ரோ உலகத்தில் ஒளியேறவிருக்கிறது. பிப்ரவரி 13-ம் தேதி மலேசிய நேரப்படி இரவு 8.15 மணி தொடக்கம் இச்சிறப்பு நேரலை இடம்பெறவிருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி 112 அடி உயர ஆதியோகி சிவனின் திருமுகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கோவை ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயரம் கொண்ட சிவனின் முகத்தோற்றத்துடன் கூடிய சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சிவனின் முழுமையான முகத் தோற்றத்தைக் கொண்ட உலக அளவில் மிகப்பெரிய சிலையாக இது கருதப்படுகிறது.

இன்றைய இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் அஸ்ட்ரோ உலகம் www.astroulagam.com.my அகப்பக்கத்தில் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.