Home நாடு இபிஎஃப் கட்டிடத்தில் தீ பற்றியது!

இபிஎஃப் கட்டிடத்தில் தீ பற்றியது!

769
0
SHARE
Ad

Jalan Gasingகோலாலம்பூர் – ஜாலான் காசிங்கில் அமைந்திருக்கும் ஊழியர்கள் சேமநிதி கட்டிடத்தில் (இபிஎஃப்) இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.50 மணியளவில் தீப்பற்றியது.

இத்தீவிபத்தில், அக்கட்டிடத்தின் 6-வது தளம் 40 விழுக்காடு எரிந்தது.

இந்நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

#TamilSchoolmychoice

இச்சம்பவம் காரணமாக பெடரல் நெடுஞ்சாலையும், ஜாலான் காசிங்கும் கடுமையான வாகன நெரிசலில் சிக்கியது.