Home கலை உலகம் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து ஹோலி கொண்டாடுங்கள்- அமிதாப் வேண்டுகோள்

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து ஹோலி கொண்டாடுங்கள்- அமிதாப் வேண்டுகோள்

534
0
SHARE
Ad

amithabachanமும்பை, மார்ச் 27- மகாராஷ்டிரா மாநிலத்தில், 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது கடுமையான வறட்சி நிலவுகின்றது.

மார்ச் மாதத்திலேயே மக்கள் தண்ணீரைத் தேடி அலையத் தொடங்கி விட்டார்கள்.  இப்போதே தண்ணீர்ப் பஞ்சம் ஆரம்பித்து விட்டதால், அனாவசியமாகத் தண்ணீரைச் செலவு செய்யாமல், ஹோலி கொண்டாடும்படி இந்தித் திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன் வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேபோன்று அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் தண்ணீர் சிக்கனத்தைப்பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

#TamilSchoolmychoice

மாணவர்களும் வீதி நாடகங்கள் மூலமும் வீடு வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதன் மூலமும் மக்களுக்குத் தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர அரசும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு தண்ணீரைச் செலவழிக்க வேண்டாமென்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.