Home நாடு வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் மஇகாவின் தலைமைக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை!

வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் மஇகாவின் தலைமைக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை!

997
0
SHARE
Ad

V.S.Mohan_கோலாலம்பூர் – நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தல் வெகுவிரைவில் நடைபெறும் என ஆருடம் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் ம.இ.காவின் வேட்பாளர்கள் பட்டியலை உடனடியாக வெளியிடுவதில் நெருக்குதல் உள்ளது என ஒரு தமிழ் நாளிதழில் வெளியிட்டச் செய்தியில் உண்மை இல்லை என மஇகாவின் தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் தெரிவித்தார்.

இது குறித்து டத்தோ வி.எஸ்.மோகன் மேலும் கூறுகையில்,

“வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுவது ஒவ்வொவொரு கட்சியின் தேசியத் தலைவரின் உரிமையாகும். அந்த அடிப்படையிலே ம.இ.காவின் தேசியத்  தலைவர் தக்கத் தருணத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார். இது இம்முறை மட்டுமல்ல, எல்லாக் கால கட்டங்களிலும் பொதுத்தேர்தலின் இறுதி நேரத்தில் தான் வேட்பாளர்களின் பட்டியலை அறிவிப்பார்கள். இதையேதான் மற்ற தேசிய முன்னணி கட்சிகளும் குறிப்பாக அம்னோவும் கடைப்பிடிக்கிறது.”

#TamilSchoolmychoice

“அந்த அடிப்படையிலே ம.இ.காவின் தேசியத் தலைவர் ஒவ்வொரு தொகுதியிலும், குறிப்பாக ம.இ.கா போட்டியிடவிருக்கும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் கேந்திரக் குழு, ஒரு மத்தியச் செயலவை உறுப்பினர், மாநில மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.”

“அக்குழுவானது அந்தந்தத் தொகுதிகளில் சிறப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் நடவடிக்கைகளும் சிறப்பான முறையிலே அந்தந்தத் தொகுதிகள் நடந்து வருகிறது. நமது ம.இ.கா கடந்தக் கால தேர்தலை காட்டிலும் இந்தப் 14-ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ள மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் காத்துக்கொண்டிருக்கிறது.”

“இதற்கு உறுதுணையாக வாக்காளர்களை அடையாளம் காணும் சூழ்நிலையும், ஆங்காங்கே நடைபெறும் பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் அவ்வப்பொழுது வழங்கி வருகிறது இந்த தேர்தல் பணிகுழு. ஆதலால், நிச்சயமாக அதிக இந்தியர்கள் இம்முறை தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்கள் என்று ம.இ.காவின் மகளிர் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் உறுதிபடுத்தியுள்ளனர்.”

“எல்லா விஷயங்களையும் சீர்துக்கிப் பார்த்துச் சிறப்பான முடிவுகளை இது நாள் வரை எடுத்துச் செயலாற்றியத் தலைவர் கண்டிப்பாக இப்பட்டியலை நேரம் வரும் போது வெளியிடுவார். ஆகவே, யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிட மேண்டாம்” என டத்தோ வி.எஸ்.மோகன் கேட்டுக்கொண்டார்.