Home நாடு பினாங்கு ஹராப்பான் தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் – தலைமை தலையிடுகிறது!

பினாங்கு ஹராப்பான் தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் – தலைமை தலையிடுகிறது!

738
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளிடையே, 6 தொகுதிகளைப் பங்கிடுவதில், குழப்ப நிலை நீடித்து வருகின்றது.

இதனால் அம்முடிவை எடுக்க பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் தலையிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 13-வது பொதுத்தேர்தல் முடிவின் படி, பினாங்கில் மொத்தம் 40 தொகுதிகளில் ஜசெக 19 தொகுதிகளையும், பிகேஆர் 10 தொகுதிகளையும், அம்னோ 10 தொகுதிகளையும், பாஸ் 1 தொகுதியையும் தக்க வைத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இவற்றில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள 6 தொகுதிகளைப் பிரிப்பதில் தான் தற்போது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளான பிகேஆர், அமனா மற்றும் பெர்சாத்து கட்சிகளிடையே குழப்ப நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.