கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மார்ச், ஏப்ரல், மே என அடுத்த மூன்று மாதங்களுக்கு, அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து புக்கிட் அமான் நிர்வாகத்துறை இயக்குநர் கமாண்டர் டத்தோஸ்ரீ அப்துல் காஃபர் ராஜாப் கூறுகையில், “இந்த உத்தரவு, புக்கிட் அம்மானைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பொருந்தும்”
“பொதுத்தேர்தலுக்குத் தயாராவதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு இது. உள்நாட்டுப் பயணம் உட்பட அனைத்திற்குமான விடுமுறைகளை நிறுத்தி வைக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்தவுடன் இதனை செயல்படுத்துவோம்” என அப்துல் காஃபர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் புக்கிட் அம்மான் இயக்குநர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அப்துல் காஃபர் தெரிவித்திருக்கிறார்.