Home இந்தியா அம்மா ஸ்கூட்டர் திட்டம் துவக்க விழா: சென்னை வருகிறார் மோடி!

அம்மா ஸ்கூட்டர் திட்டம் துவக்க விழா: சென்னை வருகிறார் மோடி!

1089
0
SHARE
Ad

சென்னை – இன்று சனிக்கிழமை மாலை இந்திய நேரப்படி 5.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் ‘அம்மா மானிய விலை ஸ்கூட்டர்’ திட்டத்தைத் துவங்கி வைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்ளும் மோடி, இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு, நாளை ஞாயிற்றுக்கிழமை புதுவை சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.