Home உலகம் ஜெருசேலத்தில் மே மாதம் தூதரகம் திறக்கிறது அமெரிக்கா!

ஜெருசேலத்தில் மே மாதம் தூதரகம் திறக்கிறது அமெரிக்கா!

968
0
SHARE
Ad

வாஷிங்டன் – ஜெருசேலத்தில் வரும் மே மாதம் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படவிருப்பதாக அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஜெருசேலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டதாகவே இத்தனை ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 6-ம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜெருசேலம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தார்.

இதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போராட்டங்கள் வெடித்தன.

#TamilSchoolmychoice

எனினும், அத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும், ஜெருசேலத்தில் அமெரிக்கத் தூதரகத்தை அமெரிக்கா மே மாதம் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.