கோலாலம்பூர் – மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவரும், உமாராணி வணிகக் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான ஏ.கே.இராமலிங்கம் தனது 50-வது பிறந்த நாளை மஇகா தலைவர்கள் மற்றும் நண்பர்கள் திரளாகக் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியோடு கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி கோலாலம்பூர் செந்தூலில் உள்ள எச்ஜிஎஸ் மண்டபத்தில் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியின் இடையே கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கலந்து கொண்டு இராமலிங்கத்தின் பணிகள் குறித்து வாழ்த்துரை வழங்கினார்.

இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன், செனட்டர் டத்தோ டி.மோகன், மஇகா தேசியப் பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி ஆகியோரும் இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
லோட்டஸ் குழுமத்தின் டத்தோ இராமலிங்கமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.