Home உலகம் மின்தூக்கி பொத்தானில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு நேர்ந்த கதி (காணொளி)

மின்தூக்கி பொத்தானில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு நேர்ந்த கதி (காணொளி)

1167
0
SHARE
Ad

பெய்ஜிங் – சீனாவின் சோங்சிங் என்ற பகுதியில் மின்தூக்கி ஒன்றில் ஏறிய சிறுவன், விஷமத்தனமாக மின்தூக்கியின் பொத்தான்களின் மேல் சிறுநீர் கழித்ததால், திடீரென மின்வெட்டு ஏற்பட்டு மின்தூக்கி பாதியிலேயே பழுதடைந்து நின்ற சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மின்தூக்கியின் உள்ளே சிக்கிக் கொண்ட அச்சிறுவனை, அக்கட்டிட பராமரிப்புக் குழுவினர் மீட்டு, பின்னர் மின்தூக்கியின் உள்ளிருந்த இரகசிய கேமராவை ஆய்வு செய்த போது தான் சிறுவனின் இந்த விஷமத்தனம் தெரியவந்திருக்கிறது.

தற்போது அந்தக் காணொளி இணையதளங்களில் பரவி வருவதோடு, பலரும் சிறுவனின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice