Home நாடு பக்காத்தான் கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் – மகாதீர் அறிவிப்பு!

பக்காத்தான் கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் – மகாதீர் அறிவிப்பு!

1058
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சங்கங்களின் பதிவிலாகா, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவைத் தாமதப்படுத்தி வருவதால், 14-வது பொதுத்தேர்தலில், பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடும் என அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களைச்ச் சந்தித்து பேசிய மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் கட்சிகளுள் ஏதேனும் ஒரு கட்சியின் சின்னத்தை தேர்தலில் பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

எனினும், எந்தக் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பதை கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் ஆலோசித்த பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.