Home வணிகம்/தொழில் நுட்பம் 7-லெவன் கிளை தொடங்க விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு!

7-லெவன் கிளை தொடங்க விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு!

1356
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவில் உள்ள இளம் தொழிலதிபர்களுக்கு, முன்னணி பேரங்காடிகளில் ஒன்றான 7-லெவன் நிறுவனத்தின் கிளையைத் தொடங்க ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தனிநபர்கள் 250,000 ரிங்கிட் முதலீட்டில் 7-லெவன் கிளையை எடுத்து, அதனை நிர்வகிக்கத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் தமது நிறுவனத்திடமிருந்துக் கற்றுக் கொண்டு சுயமாக பேரங்காடியைத் திறம்பட நடத்தலாம் என அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இது குறித்து எஸ்இஎம் (7-லெவன்) நிறுவனத்தின் பங்குதாரரும், பெர்ஜெயா டைம்ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனருமான டான்ஸ்ரீ வின்செண்ட் கூறுகையில், “7-லெவன் மலேசியா வர்த்தகத்திலும், வெற்றியிலும் தொடர்ந்து நிரூபித்து வருகின்றது. எனவே திறமையாகவும், கடுமையான உழைப்பையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு இந்நிறுவனத்தில் வெற்றி ஒரு பெரிய விசயமே இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இது குறித்த மேல்விவரங்களை www.7eleven.com.my என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.