Home வணிகம் 7-லெவன் நிறுவனத்தில் ஜோகூர் சுல்தான் முதலீடு

7-லெவன் நிறுவனத்தில் ஜோகூர் சுல்தான் முதலீடு

1473
0
SHARE
Ad

7 eleven-logoஜோகூர் பாரு – பல்வேறு நிறுவனங்களிலும், தொழில்களிலும் முதலீடு செய்து வரும் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் நாடு தழுவிய நிலையில் 7-லெவன் (7-Eleven) என்ற பெயரில் 24 மணி நேரக் கடைகளை இயக்கிக் கொண்டிருக்கும் 7-லெவன் மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்.

ஏற்கனவே, 7-லெவன் நிறுவனத்தில் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ள ஜோகூர் சுல்தான் கடந்த ஆகஸ்ட் 28 முதல் 30-ஆம் தேதி வரை மேலும் 2.44 மில்லியன் பங்குகளை அந்த நிறுவனத்தில் வாங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது மொத்த பங்குகளின் அளவு 7-லெவன் நிறுவனத்தில் 102.40 மில்லியனாக உயர்ந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் 9.22 சதவீத பங்குகளின் உரிமைகளை தற்போது ஜோகூர் சுல்தான் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 7-லெவன் நிறுவனத்தின் பங்கு விலை இன்று புதன்கிழமை ஒரு ரிங்கிட் 41 காசாக பங்குச் சந்தையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.