Home உலகம் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்!- இலங்கை அரசாங்கம்

புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்!- இலங்கை அரசாங்கம்

596
0
SHARE
Ad

tamil-eelamஇலங்கை, மார்ச் 27- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதனை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட இரகசிய ஆவணங்களில் இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான தகவல்கள் காணப்பட்டுள்ளன. அமெரிக்கப் படையினர் பயன்படுத்தும் எம்16 ஆயுதங்களையும் சமிக்ஞை கருவிகளையும் புலிகள் பயன்படுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

புலிகளின் கப்பல்கள் சர்வதேச கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

புலிகளுக்காக ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குமரன் பத்மநாதனையும் சாட்சியாக ஆஜர் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.