Home வணிகம்/தொழில் நுட்பம் செராசில் சலுகை விலை ஐபோன் வாங்க அலைமோதிய கூட்டம்!

செராசில் சலுகை விலை ஐபோன் வாங்க அலைமோதிய கூட்டம்!

1011
0
SHARE
Ad

கோலாலம்பூர் – செராஸ் மைடவுன் வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் ‘சுவிட்ச்’ என்ற மொத்த விற்பனைக் கடையில் ஐபோன் தயாரிப்புப் பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படவிருப்பதாக சில தினங்களுக்கு முன் ஃபேஸ்புக்கில் அறிவிப்புகள் வெளியாகின.

இன்று மார்ச் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரையிலும் இந்த சலுகை விலை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் அந்த வணிக வளாகத்திலுள்ள கடையில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

#TamilSchoolmychoice

இதனை எதிர்பார்க்காத சுவிட்ச் நிர்வாகமும், வணிக வளாக நிர்வாகமும் செய்வதறியாது தவித்தனர்.

இந்நிலையில், வேறுவழியின்றி சுவிட்ச் நிர்வாகம், பாதுகாப்பு காரணங்களுக்கு இன்று சலுகை விலை விற்பனை கிடையாது என அறிவித்தது.

இதனால், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.