Home உலகம் புத்த துறவிகள் – முஸ்லிம்கள் மோதல்: இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம்!

புத்த துறவிகள் – முஸ்லிம்கள் மோதல்: இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம்!

964
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கையின் கேண்டி மாவட்டத்தில், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டிருப்பதால், 10 நாட்களுக்கு இலங்கையில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்திருக்கிறது அந்நாட்டு அரசாங்கம்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், அங்குள்ள மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாறும் படி கட்டாயப்படுத்தி வருவதாகவும், புத்தமதத்தின் பழங்காலச் சுவடுகளை அழிக்க முயற்சி செய்வதாகவும், புத்தத்துறவிகள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், புத்த தேசியவாதிகள் சிலர், இலங்கையில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வரும் மியன்மார் நாட்டின் ரோஹின்யா அகதிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், இந்த வன்முறை இலங்கையின் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் தயாசிரி ஜெயசேகரா தெரிவித்திருக்கிறார்.