Home கலை உலகம் மார்ச் 16 முதல் டீசர், இசை வெளியீடு இல்லை: தயாரிப்பாளர் சங்கம்

மார்ச் 16 முதல் டீசர், இசை வெளியீடு இல்லை: தயாரிப்பாளர் சங்கம்

919
0
SHARE
Ad

சென்னை – திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிராக, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததன் படி, மார்ச் 1 முதல் திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படாமல் இருந்து வருகின்றது.

இந்நிலையில், வரும் மார்ச் 16-ம் தேதி முதல், படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது என்றும், டீசர் வெளியீடு, இசை வெளியீடு, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பது உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.