Home நாடு பழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவு: சாதனை விழா எடுக்கிறது அதிமுக!

பழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவு: சாதனை விழா எடுக்கிறது அதிமுக!

1061
0
SHARE
Ad

சென்னை – எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக இன்று வெள்ளிக்கிழமை சாதனை விழா எடுக்கிறது அதிமுக.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இவ்விழா நடக்கிறது.

இவ்விழாவில், நடப்பு அதிமுக அரசின் சாதனைகள், புகைப்படங்களின் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

#TamilSchoolmychoice

அவரையடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ஆகியோரும் உரையாற்றவிருக்கின்றனர்.

மேலும், இவ்விழாவில் அமைச்சர்களும், அரசாங்க உயர் அதிகாரிகளும், முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.