Home நாடு பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் மரியா சின்!

பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் மரியா சின்!

1057
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், முன்னாள் பெர்சே 2.0 அமைப்பின் தலைவரான மரியா சின் அப்துல்லா, பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கிறார்.

ஆனால், எந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் என்பதை பிகேஆர் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை.

இது குறித்த அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை பிகேஆர் தலைமையகத்தில், அக்கட்சியின் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா மற்றும் மகளிர் அணித் தலைவர் ஜுரைடா கமாருடின், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

“இந்தத் தருணத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறோம். மக்களைப் பிரதிநிதிக்கும் மரியா போன்றவர்கள் எங்களோடு இருப்பது, எப்போதும் எங்களது சீர்திருத்த சிந்தனைகளும், கொள்கைளும் நிலையாக இருப்பதைக் காட்டுகிறது. உண்மையில் பிகேஆர் பாரம்பரியத்தில் இது மிக முக்கியமானதாகும்” என நூருல் இசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.