Home உலகம் ஹோ சி மின் நகர் அடுக்குமாடியில் தீ – 13 பேர் பலி! 27 பேர்...

ஹோ சி மின் நகர் அடுக்குமாடியில் தீ – 13 பேர் பலி! 27 பேர் காயம்!

965
0
SHARE
Ad

ஹனோய் – வெள்ளிக்கிழமை அதிகாலை ஹோ சி மின் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் பலியாகினர். 27 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வோ வான் கியாட் நகரில் உள்ள கரினா பிளாசா என்ற கட்டிடத்தில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் தீ பிடித்ததாக வியட்நாம் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இறந்த 13 பேரில் பெரும்பாலானவர்கள் கரும்புகையால் மூச்சுத் திணறி இறந்ததாகவும், சிலர் அடுக்குமாடியில் இருந்து குதித்ததில் மரணமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice