Home One Line P1 முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதால் வியட்நாமிய மீனவர் சுடப்பட்டார்

முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதால் வியட்நாமிய மீனவர் சுடப்பட்டார்

548
0
SHARE
Ad

பாசீர் பூத்தே: நாட்டின் நீர் எல்லைக்குள் நுழைந்த 2 வியட்நாமிய மீன்பிடி படகுகளில் ஒன்றின் மீது, கிளந்தான் கடல் அமலாக்கத் துறை (ஏபிஎம்எம்) துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது.

பாதுகாப்புப் படையினர் மீது டீசல் குண்டை வீசி மோத முற்பட்ட வெளிநாட்டினர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் வியட்நாமிய மீனவரை சுட்டுக் கொன்றது குறித்து கிளந்தான் கடல் அமலாக்கத் துறை இயக்குனர் முகமட் நோ சியாம் அஸ்மாவி யாகோப் கூறுகையில், வெளிநாட்டு மீனவர் அமலாக்க அதிகாரிகள் மீது முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

படகில் எரியும் இரப்பரை வீசி அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் நடந்துக் கொண்டனர் என்று அவர் கூறினார்.

“அமலாக்கப் பிரிவினர் எச்சரிக்கையை விடுத்த போதும், வெளிநாட்டு மீனவர்கள் சரணடைய மறுத்துவிட்டனர். அதற்கு பதிலாக அமலாக்கப் பிரிவினர் படகில் மோதியதன் மூலம் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதன் விளைவாக ஓர் அதிகாரி தன்னை தற்காத்துக் கொள்ள படகில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்,” என்று நேற்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு முன்னர், தேசிய அமலாக்க அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று கண்காணிப்பை மேற்கொண்டனர். பிற்பகல் 3.30 மணியளவில் தோக் பாலி கரையிலிருந்து 81 கடல் மைல் தொலைவில் நாட்டின் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த மீனவர் உட்பட 19 மீனவர்களை ஏற்றிச் சென்ற 2 படகுகளைக் கண்டறிந்தது.

30 வயது வியட்நாமிய மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பாசீர் பூதேயில் உள்ள தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சம்பந்தப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி படகுகளைப் பின்தொடர்ந்து தடுத்து வைக்க அமலாக்கப் பிரிவினர் உறுப்பினர்கள் குழுவை அனுப்பியது.

அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், வெளிநாட்டு மீனவர் சரணடைந்தனர். அதே நேரத்தில் படகு மற்றும் மொத்தம் சுமார் 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தோக் பாலியில் உள்ள கடல்சார் தலைமையகத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டது.