Home உலகம் கொவிட்-19: ஹோ சி மின் நகரத்தில் ஒட்டுமொத்த பரிசோதனை

கொவிட்-19: ஹோ சி மின் நகரத்தில் ஒட்டுமொத்த பரிசோதனை

450
0
SHARE
Ad

ஹனொய்: ஹோ சி மின் நகரத்தின் ஒட்டுமொத்த மக்களையும் பரிசோதித்து புதிய சமூக தொலைதூர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், புதிய கொவிட் பாதிப்பை கட்டுப்படுத்த வியட்நாம் னடவடிக்கை எடுத்துள்ளது.

மத ஒன்று கூடல் மூலமாக புதிய தொற்று குழு ஏற்பட்டதை அடுத்து இந்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வியட்நாம் ஒப்பீட்டளவில் வெற்றியைப் பெற்றது, ஆனால் கடந்த வாரங்களில் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

#TamilSchoolmychoice

வார இறுதியில், நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பிறழ்வு மிகவும் ஆபத்தானது என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

புதிய பிறழ்வு இந்தியாவிலும் இங்கிலாந்திலும் முதலில் அடையாளம் காணப்பட்ட வகைகளின் அம்சங்களை ஒருங்கிணைக்கிறது என்றும், இது விமானம் மூலம் எளிதில் பரவக்கூடியது என்றும் அரசாங்கம் கூறுகிறது.

ஒட்டுமொத்தமாக, நாடு 7,000- க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளையும் 47 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.