கோத்தா கினபாலு: எண்ணெய் நிலையங்களைத் தவிர சபாவில் உள்ள அனைத்து வணிகங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு 7 மணிக்குள் கடையை மூட வேண்டும் என்று மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
மாநிலத்தின் கொவிட் -19 செய்தித் தொடர்பாளர் மாசிடி மஞ்சுன், அத்தியாவசிய பிரிவில் உள்ள உணவகங்கள், கடைகள், சலவை கடைகள், சந்தைகள் உள்ளிட்ட அனைத்து வணிகங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்றார்.
நாளை நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கின் கீழ், கடைகளில் உண்பதற்கு அனுமதி இல்லை. உணவுகளை எடுத்துச் செல்லுதல் மற்றும் உணவு விநியோகம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மத நடவடிக்கைகள் குறித்து, முஸ்லீம் மற்றும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களில் அதிகபட்சம் 12 உறுப்பினர்கள் பிரார்த்தனைக்காக வளாகத்தில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.