கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தின் கவனக்குறைவான அணுகுமுறைக்கு வருத்தம் தெரிவித்தார்.
இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கிற்கு மக்களுக்கு வங்கி கடன்கள் தொடர்பான தள்ளுபடி குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று அவர் கூறினார்.
இந்நேரத்தில் வங்கி அதிக இலாபத்தை பதிவு செய்து வருவதாக பல தகவல்கள் வந்தாலும், கடன் தள்ளுபடியை அமல்படுத்துவது பற்றி அரசு விவாதிக்கப்படவில்லை என்று பிகேஆர் தலைவரான அன்வார் கூறினார்.
முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் போது, எந்தவொரு சிறப்பு உதவித் தொகையையும் அரசாங்கம் அறிவிக்காதபோது இது இன்னும் மோசமானது என்று அன்வார் கூறினார்.
“வங்கிகள் பெரும் இலாபங்களை அறிவித்த போதிலும், இன்றுவரை தற்காலிக தள்ளுபடி குறித்த உறுதியான அறிக்கை எதுவும் இல்லை. ஒவ்வொரு முறையும் கட்டுப்பாடுகள் இருக்கும் போது மக்களுக்கு உதவி இருக்க வேண்டும்.
“இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு இருக்கும் போது, மக்கள் வேலை இழப்பர். அதனால் தொழிற்சாலை மூடப்படும். எனவே இவை அனைத்தும் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட உதவியுடன் தீர்க்கப்பட வேண்டும்,” என்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறினார்.
மே 11 அன்று, தேசிய வங்கி கடன் தள்ளுபடி என்பது கடன் வாங்குபவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்காது, அதற்கு பதிலாக அவர்கள் வங்கிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.