Home இந்தியா டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் தடை!

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் தடை!

867
0
SHARE
Ad

புதுடெல்லி – டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் வகையில், தனது அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கித் தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அதன் படி, தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி தரக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அதனை எதிர்த்து தமிழக முதல் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.

மேலும், இரட்டை இலை வழக்கை இன்னும் 3 வாரங்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.